அண்ணாத்த - நவம்பர் 4 தீபாவளி வெளியீடு

26 Jan 2021

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.

இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கொரானோ தாக்கம் கடந்த வருடம் ஏற்பட்ட பின்பும் மே மாதம் இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். அதன்பின்னும் ஆறு மாதங்களாக படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவேயில்லை.

டிசம்பர் மாதத்தில்தான் மீண்டும் ஆரம்பமாகி சில நாட்கள் நடைபெற்றது. அதற்குள் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும், படப்பிடிப்பில் சிலருக்கு கொரானோ தொற்று பரவியதாலும் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட வாய்ப்புள்ளதாம்.

எனவே, இந்த வருட தீபாவளிக்கு படத்தை பிரம்மாண்டமாக வெளியிடலாம் என நேற்றே அறிவித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ வருகிறதென்று சுமார் 10 மாதங்களுக்கு முன்பே சொல்லிவிட்டால் மற்றவர்கள் அதற்கேற்றபடி தங்கள் வெளியீட்டுத் தேதியை வைத்துக் கொள்வார்கள் என்பதே இவ்வளவு சீக்கிர அறிவிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

Tags: rajinikanth, nayanthara, keerthy suresh, siva, imman, annathe, meena, khushbu

Share via: