‘அண்ணாத்த’ - பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு
12 May 2020
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பட வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்துவிட்டனர்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது.
கொரானோ ஊரடங்கு முடிந்த தியேட்டர்களைத் திறக்க சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். இருந்தாலும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகம்தான்.
எப்படியும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரானோ பிரச்சினை தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. எனவே, பெரிய படங்களை பொங்கல் நாளிலிருந்து வெளியிடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கணித்து அந்தத் தேதியை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம்.
விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’, சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் தீபாவளிக்குள் வெளியாகிவிடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags: annaatthe, rajinikanth, siva, sun pictures, nayanthara, keerthy suresh