மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ரகுமான்
12 Jan 2021
தமிழ் சினிமாவில் 1986ம் ஆண்டு வெளிவந்த ‘நிலவே மலரே’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரகுமான்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
2016ம் ஆண்டில் வெளிவந்த ‘துருவங்கள் 16’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.
இப்போதும் மூன்று மொழிகளிலும் இடைவிடாமல் நடித்து வருகிறார்.
தற்போது ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரகுமான், விரைவில் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைகிறார்.
இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் அகமது இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோர் நடிக்கும் 'ஜன கன மண', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் இயக்கத்தில் ‘சமரா’ படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது.
2021ம் ஆண்டும் ரகுமானுக்கு பிஸியான ஆண்டுதான்.
Tags: rahman, actor rahman