சென்னை, ராயப்பேட்டையில் ‘இண்டஸ் இந்த்’ வங்கி புதிய கிளை திறப்பு

Release Date:04 Sep 2015
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் 'இண்டஸ் இந்த்வங்கியின் புதிய கிளை திறக்கப் பட்டது. இந்தத் திறப்பு விழாவில் ஹஜ் கமிட்டி இந்தியாவின் துணைத் தலைவர் ஏ.அபுபக்கர் கலந்து கொண்டு வங்கிக் கிளையைத் திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இண்டஸ் இந்த் வங்கியின் தெற்கு மண்டலம் I I-ன் தலைவர்  எஸ்.டி.கோபால், இண்டஸ் இந்த் வங்கியின் சென்னை மெட்ரோ பிராந்தியத் தலைவர் எல்.ராஜேஷ், டாக்டர் சுஜய் சுப்ரமணியன், புதிய வங்கியின் கிளை மேலாளர் பழனியப்பன் பிள்ளைஆகியோர் கலந்து கொண்டனர். இண்டஸ்இந்த் வங்கியைத் திறந்து வைத்து ஹஜ் கமிட்டி, (இந்திய வெளியுறவுத் துறை) துணைத் தலைவர் அபுபக்கர் பேசும் போது. "'ஹஜ் கமிட்டி ஆப் இந்தியா' வுக் கென்று தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள் அனைவருமே ஏழை எளிய மக்கள்தான், அதிலும் வயது முதியவர்கள் அதாவது அறுபது எழுபது வயதுக்கு மேற்பட்ட  முதியவர்கள்தான் செல்கிறார்கள். ஹஜ்ஜுக்கு 2015ல் பயணம் செல்பவர்களுக்கென்று இண்டஸ் இந்த் வங்கி குறைந்த பட்ச 'எல் ஒன் பிட்' கொடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளது. அந்தவகையில்இண்டஸ் இந்த் வங்கியை நான் மனமாரப் பாராட்டுகிறேன். வங்கிகள் என்றாலே லாப நோக்கில் பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் செயல்படும் மனப்பான்மை இருக்கும். ஆனால் இண்டஸ் இந்த் வங்கி சேவை நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. 2015ல் அரசு உதவியுடன் ஹஜ்ஜுக்கு பயணமாக இப்படிச் சவுதி அரேபியா செல்பவர்கள் 1,15,000 ஆக எதிர்பார்ப்பு இலக்கு இருக்கிறது. தவிர தனியே 30,000 பேர் செல்கிறார்கள். இந்தியாவில் ஹஜ் செல்பவர்களுக்கு 26 விமான நிலையங்களில் 1 லட்சத்து 15ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு 400 கோடி ரூபாயை தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை  ரியாலாக வழங்க இவ்வங்கி இந்திய அரசின் சட்ட பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த வங்கி இப்படி இந்த சட்டபூர்வ அனுமதியை இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளது. இதன்படி ஒவ்வொரு பயணிக்கும் அரசு வழங்கியுள்ள அந்த 2000 ரியாலை வழங்கவுள்ளது. இந்த சேவைக்காக இந்த வங்கியை ஹஜ் கமிட்டியும் மத்திய வெளியுறவுத் துறையும்  மனமாரப் பாராட்டுகிறது. இந்த ராயப்பேட்டை பகுதியிலுள்ள சிறு வணிகர்கள், பில்டர்கள், மருத்துவமனைகள், நடுத்தர வர்க்க தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி உதவிட இந்த வங்கியைக் கேட்டுக் கொள்கிறேன். கல்விக் கடன்களையும் வழங்கி உதவிட கேட்டுக் கொள்கிறேன். இந்த வங்கி ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் முதல் வங்கியாக வளர்ந்து திகழவும் வாழ்த்துகிறேன்,'' என்றார். முன்னதாக கிளை மேலாளர் பழனியப்பன் பிள்ளை அனைவரையும் வரவேற்றார்.

Share via: