ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கைதி’

03 Feb 2020

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘கைதி’.

விஜய் நடித்த ‘பிகில்’ படத்துடன் போட்டியிட்டு வெளிவந்தாலும் ‘கைதி’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதோடு படத்தின் வசூல் 100 கோடியையும் கடந்தது.

இப்போது படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழில் படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.

படத்தை இயக்கப் போவது யார், நடிக்கப் போவது யார் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

தமிழில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இதன் மூலம் ஹிந்தியில் கால் பதிக்கிறது

Tags: kaithi, karthi

Share via: