இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்
23 Sep 2017
சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் டீஸர்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.
இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்.
படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.