‘ஸ்பீட், கெட் செட் கோ’ - விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி
18 Dec 2019
விஜய் டிவியில் ‘ஸ்பீட், கெட் செட் கோ’ என்ற தலைப்பில் மற்றொரு சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி உள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் இரண்டு அணிகள் குழுவாக பங்கேற்கும். ஒவ்வொரு குழுவிலும் ஊடகத் துறையில் பிரபலமான மூன்று ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் இடம்பெறுவர். இரு அணிகளும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியதுதான் இந்த ‘ஸ்பீட்’ விளையாட்டு நிகழ்ச்சி.
இரு அணிகளும் எதிர் கொள்ளும் பல கட்டங்கள் உள்ளன. முதல் சுற்றில் டம்ப் ஷரட்ஸ், ரிலே, ஆகியவையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகள் கடும் போட்டிகள் நிறைந்த சுற்றாகவும் இருக்கும். இறுதிச் சுற்று போட்டியாளர்களின் திறனை அவர்களின் வேகத்தை சோதிக்கும் போட்டியாக இருக்கும்.
போட்டி சுற்றுகளில் ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு உறுப்பினர் ஒரே நேரத்தில் சில பணிகளைச் செய்வார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டாஸ்க்குகளை விரைவாக முடிப்பதில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
இந்நிகழ்ச்சி வேகம் மற்றும் விவேகம் நிறைந்த ஒரு விளையாட்டுப் போட்டியாகும். இது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 22 அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் சூப்பர் சிங்கர் பாடகர்கள் ராஜலட்சுமி, மாளவிகா, சௌந்தர்யா, செந்தில், லோகேஷ், சத்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.