விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்
20 Feb 2019
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற புத்தம் புதிய தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கண்ணம்மா என்ற இளம் பெண் அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவர். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.
கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற மாற்றாந்தாய் சகோதரி இருக்கிறாள். அவள் புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.
கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு மாப்பிள்ளை அமைகிறது . அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை இத்தொடரின் பார்க்கலாம்.
பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். இவர் ‘மேயாத மான்’ படத்தில் நடித்தவர். தொடரின் நாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கிறார். அஞ்சலியாக சுவீட்டி நடிக்கிறார்.
பிரவீன் பென்னெட் இயக்கும் இத் தொடரின் இசையமைப்பாளர் இளையவன்.
காதல், பாசம், சென்டிமெண்ட் கலந்த தொடராக ‘பாரதி கண்ணம்மா’ இருக்கும்.