சூறாவளி - விரைவில்... திரையில்...

லால்ராய் அசோசியேட்ஸ் தயாரிப்பில், பாலு & பால்கி இயக்கத்தில் தர்மா, தர்ஷினி, ஆலிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூறாவளி’.

வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாகச் செய்கிறது. பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.

ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்குச் சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் ( கதாநாயகி ), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையைக் காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பலை சூறாவளி போல் சூறையாடத் தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா ? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா ? என்பதுதான் இப்படத்தின் கதை.

தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் ஆலிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 

சென்னைக்கு வர தேதியில்லாததால் ‘சூறாவளி’ படக்குழுவினார் மைசூருக்குச் சென்று அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பிற்கு தயாராக, கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன அதிகாரிகள் அனுமதி மறுக்க அன்று ஒரு இரவுக்கு மட்டும் அனுமதி வாங்கி அன்றே படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து விரைவில் வெளியாக உள்ளது.


பேனர் - லால்ராய் அசோசியேட்ஸ்
நடிகர்கள் - தர்மா, தர்ஷினி, ஆலிஷா
இசை அமைப்பாளர் - ஜேக்கப் சாம்யேல்
கேமராமேன் - சந்திரன்சாமி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - பாலு & பால்கி
தயாரிப்பு - P. லால்பகதூா்