நெ 6 கால்பந்தாட்டக் குழு - படப்பிடிப்பில்...

ஐ கிரியேஷன்ஸ் மற்றும் பிஎஸ்எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘நெ.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.

“தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா” ஆகிய படங்களை இயக்கிய ஹரி உத்ரா இப்படத்தை இயக்குகிறார். 

முந்தைய படங்களில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி படங்களை இயக்கிய ஹரி உத்ரா இப்படத்தை விளையாட்டை மையமாகவைத்து எடுக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான நிஜ கால்பந்து வீரர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். 90 சதவீத இரவுக் காட்சிகள்தான் படத்தில் இடம் பெறுகிறதாம்.

விளையாட்டில் அரசியல் எவ்வளாறு புகுத்தப்படுகிறது என்பதை யதார்த்தமாக, அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்ஷனுடன் படமாக்கியிருக்கிறார். 

மதுரை, பரமக்குடி, ராமதநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கதாநாயகனாக ஷரத், கதாநாயகியாக ஐரா மற்றும் ‘அருவி’ புகழ் மதன், விஜய் முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அலிமிர்ஸாக் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை குவைத் வித்யாசாகர் எழுதியுள்ளார்.

படம் மே மாதம் வெளியாக உள்ளது.