மாறா - விரைவில்... திரையில்...

பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில், திலீப்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாறா’.

துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்தான் ‘மாறா’.

‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். 

மௌலி, குரு சோமசுந்தரம், அலெக்சாண்டர் பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ஜனவரி 8ம் தேதி இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.