களத்தில் சந்திப்போம்

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘களத்தில் சந்திப்போம்’.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 90வது படமான இப்படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக  உருவாகியுள்ளது. 

நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.

ஜீவா, அருள்நிதி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்கிறார்கள்.

காரைக்குடி செட்டியாராக ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பாலசரவணன் நகைச்சுவை வேடங்களில் நடிக்க, இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் .

பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் .

இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், தீபாவளிக்கு இப்படம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் :

கதை – திரைக்கதை - எழுத்து - இயக்கம்  - N .ராஜசேகர்
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் -  ஆர். அசோக்
இசை - யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் - பா .விஜய், விவேகா
ஒளிப்பதிவு - அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு - தினேஷ் பொன்ராஜ்
கலை -  M. முருகன்
நடனம் -  ராஜு சுந்தரம்
சண்டைப் பயிற்சி -  பிரதீப்
நிர்வாகத் தயாரிப்பு - ஸ்ரீநாத் ராஜா மணி
தயாரிப்பு மேற்பார்வை - புதுக்கோட்டை M. நாகு, R. ரமேஷ்
மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, ரியாஸ் கே அஹ்மத்