ஜெய் பீம் - நவம்பர் 2 முதல்...

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  மற்றும் பலர் நடிக்கும் படம் ஜெய் பீம்.

மிஸ்டரி டிராமா வகைப் படமாக தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. 

ராஜ்கண்ணு கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக்கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இனப் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா ? நீதி கிடைத்ததா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.

2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணை தயாரிப்பு செய்கிறார்.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படம் நவம்பர் 2ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.

தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - த.செ.ஞானவேல்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர்