எனிமி - நவம்பர் 4 முதல்...

மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரிக்க, ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எனிமி’.

ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் பின்னணி இசை அமைக்கிறார். ரவிவர்மா சண்டைக் காட்சிகளை அமைக்க, ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா படத் தொகுப்பு செய்கிறார்.

எனிமி படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது.