ஈஸ்வரன் - விரைவில்... திரையில்...

மாதவ் மீடியா, டி கம்பெனி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.

மிகவும் குறுகிய காலத்தில் தயாரித்து முடிக்கப்பட்டு வெளியாகும் படம். சிம்பு - சுசீந்திரன் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்.

‘பூமி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் நிதி அகர்வால் நடிக்கும் இரண்டாவது படம். ஒரே நாளில் தான் நடித்த இரண்டு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக உள்ளார் நிதி.

மற்றொரு கதாநாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திலும் மற்றும் அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

‘ஒஸ்தி’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன்.

ஜனவரி 14ம் தேதி பொங்கலன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.