பூமி - விரைவில்... திரையில்...

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், லட்சுமண் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் பூமி.

‘ரோமியோ ஜுலியட், போகன்’ படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி, இயக்குனர் லட்சுமண் இணையும் மூன்றாவது படம் இது.

2003ல் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜெயம் ரவியின் 25வது படம் ‘பூமி’

ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிதி அகர்வால் இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ரோனித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குனர் லட்சுமண், இசையமைப்பாளர் இமான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.