அவ்னி சினி மேக்ஸ் சார்பாக குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘அரண்மனை 3’.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த மூன்றாவது பாகமும் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது.
இப்படத்தை ஓடிடியில் வாங்கி வெளியிட கடும் போட்டி இருந்தாலும், படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டுமென இயக்குனர் சுந்தர் .சி முடிவெடுத்துள்ளார். படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் சீக்கிரமே படத்தை வெளியிடுங்கள் என்று சொன்னார்களாம்.
முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். முதல் இரண்டு பாகங்களை குழந்தைகளும் ரசித்த நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்:
இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன் / தளபதி தினேஷ் / பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்