ஜீ குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் திரைப்பட சேனலான ஜீ திரை டிவி, அதன் மேற்கோளான ‘ரத்தத்தில் கலந்தது சினிமா’ என்பதற்கேற்ப இந்த புதிய ஆண்டில் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
சமீபத்தில் ‘1 மணி திரையரங்கம்’ என சிறப்பு மதியக் காட்சியாக ஒவ்வொரு வாரமும் சிறப்பான கதைக்கருக்களை மையமாகக் கொண்ட படங்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்த வருடத்தில் , ‘காமெடி கலாட்டா, குடும்பங்களுடன் கொண்டாடும், சஸ்பென்ஸ் த்ரில்லர்’ என மேலும் புதிய பெயர்களுடன் படங்களை ஒளிபரப்ப உள்ளது.
52 வாரங்களுக்கு 52 திரைப்படங்களை பிரீமியர் காட்சியாக திரைப்படங்களை ஒளிபரப்பவும் உள்ளார்கள். இந்த ஜனவரி மாதத்திற்கான சில முக்கிய புதிய படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வரிசையில் ஒளிபரப்பாக உள்ள படங்களின் விவரம்...
ஜனவரி 8 - இரவு 7 மணி - கருப்பங்காட்டு வலசு (உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக)
ஜனவரி 14 - இரவு 7 மணி - அசுரகுரு (உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக)
ஜனவரி 15 - இரவு 7 மணி - ஒரு கிடாயின் கருணை மனு
ஜனவரி 22 - இரவு 7 மணி - நேத்ரா
ஜனவரி 24 - நண்பகல் 12 மணி - ஜுமாஞ்சி - த நெக்ஸ்ட் லெவல்
ஜனவரி 29 - த கிரேட் பாதர்