ஜீ தமிழ் - தனித் தீவில் நடக்க உள்ள ‘சர்வைவர்’ நிகழ்ச்சி

ஜீ தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ‘சர்வைவர்’.

இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இந்த நிகழ்ச்சி ஒரு தனித் தீவில், எந்த ஒரு செட் இல்லாமல்,  போட்டியாளர்களின் நம்பகத்தன்மையுடன் கூடிய செயல்களுடன் இருக்கும். ‘பிக் பாஸ்’ போன்ற செட்டில் நடக்கும் ரியாலிட்டி ஷோவிற்கு நடுவே இது உண்மையிலே கண்ணுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.

இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் 15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் தங்கி, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும். 
போட்டியாளர்களுக்கு எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்பட மாட்டாது. அதே நேரம் நிகழ்ச்சியில் சவால்கள் நிறைய உண்டு. சவால்களை எதிர்கொண்டு, எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் ஒருவரே டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்.

இந்நிகழ்ச்சிக்கென  போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை  சேனல் துவங்கிவிட்டதாம். மேலும், இந்த நிகழ்ச்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு இருக்குமாம்.

இந்த பிரம்மாண்டமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.