ஜீ தமிழ் டிவியில் வரும் ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புத்தம் புதிய திரைப்படமும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளது.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், லால், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
காலை 8 மணிக்கு அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல் நடித்த ‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’ படம் ஒளிபரப்பாக உள்ளது.
காலை 10.30 மணிக்கு ஸ்ரீகாந்த், லட்சுமி ராய் நடித்த மிருகா படம் ஒளிபரப்பாகிறது.
பிற்பகல் 1 மணிக்கு இரண்டு மணி நேர நிகழ்ச்சியாக இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா - ஸ்டார்ஸ் ஸ்பெஷல்’ ஒளிபரப்பாகிறது. இதில் பிரபல நட்சத்திரங்களும், அவர்களது குடும்பத்தினர்களும் எதிரெதிர் அணியாக பேசுகிறார்கள்.
பிற்பகல் 3 மணிக்கு ‘யாரடி நீ மோகினி - வெற்றிவிழா’ கொண்டாட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 1250 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமான ஒளிபரப்பான இத்தொடரில் நடித்த நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
மாலை 5 மணிக்குவிரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சியான ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவும் அன்று ஒளிபரப்பாகும். ஆர்ஜே விஜய், கிகி ஆகியோர் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்து, நேயர்களிடம் அந்நிகழ்ச்சி பற்றி பகிர உள்ளார்கள்.