ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ஸ்டேட் ஆஃப் ஸீஜ் - டெம்பிள் அட்டாக்’

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஜீ 5, பல்வேறு மொழிகளில் பல வகையான படைப்புகளை வெளியிட்டு வருகிறது. 

மும்பை தாக்குதலை மையமாகக் கொண்ட ‘ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11’, ஒரிஜனலைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக்’ ஒரிஜனல் படத்தை, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜுலை 9ம் தேதியன்று ஜீ 5 வெளியிடுகிறது.

இதில் அக்‌ஷய் கண்ணா நடித்துள்ளார். என்எஸ்ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தைத் தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி ஃபட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11 ஐ உருவாக்கிய அற்புதமான குழுவான கண்டிலோ பிக்சர்ஸ் (அபிமன்யு சிங்) இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘அபய் 2’ வை இயக்கிய கென் கோஷ் இயக்குகிறார். ஓய்வுபெற்ற கலொனர் சுந்தீப் சென், ‘ஸ்டேட் ஆஃப் ஸீஜ்’ படைப்புகளுக்கு ஆலோசகராக இருக்கிறார். (26/11 மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இவர் இருந்தார்)

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக், நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இந்தியாவின் துணிவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது. சீஜ் தொடரின் மேன்மையைத் தொடர்கிறது. 

அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற, தீவிரவாதிகளை வெற்றிகரமாகப் பிடிக்க / கொல்ல என்எஸ்ஜி எப்போதுமே தங்களின் மன உறுதியை, தீர்மானத்தைக் காட்டியிருக்கிறது. மோசமான கோயில் தாக்குதலுக்குப் பின் நடந்த விஷயங்களை, அவர்களின் பயணத்தை இந்தப் படம் உங்களுக்குக் காட்டும்.

பரபரப்பு, விறுவிறுப்பு, சண்டை, உணர்ச்சிகள் மர்மம் என இந்தப் படம் ரசிகர்களை அவர்களின் சீட்டின் நுனியில் வைத்திருக்கும்.

“இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. ஒரு கடற்படை அதிகாரியின் மகனாக, நமது ஆயுதம் ஏந்திய வீரர்களின் திறனைப் பார்த்து ஆச்சரியத்துடன் வளர்ந்தேன். ‘ஸ்டேட் ஆஃப் ஸீஜ் : டெம்பிள் அட்டாக்’ திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ஜீ 5 தளத்தில் இந்தப் படத்தை வெளியிட ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று படத்தின் இயக்குநர் கென் கோஷ் கூறியுள்ளார்.