விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் “பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி” ஆகிய தொடர்கள் தமிழ்நாடு பார்வையாளர்களைக் கவர்ந்து அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் முன்னிலையில் இருக்கிறது.
ஈரமான ரோஜாவே, சுந்தரி நீயம் சுந்தரி நானும், தேன்மொழி பி.ஏ., அன்புடன் குஷி’ ஆகிய தொடர்களும் அதிகம் பார்க்கப்படும் தொடர்களாக ரேட்டிங்கில் உள்ளன.
அடுத்து மேலும் ஒரு புதிய தொடராக ‘வேலைக்காரன்’ என்ற தொடரை வரும் டிசம்பர் 7ம் தேதில் முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.
வேலன் ஒரு நேர்மையானவேலைக்காரன். அவன் தனது முதலாளியின் குடும்பத்தின் மரியாதையைப் பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்வார். குடும்பத்தின் தலைவர் விசாலட்சி அம்மா, அவரும்ம் வேலனை தனது மகனைப் போலவே நடத்துகிறார்.
வள்ளி மற்றொரு வேலையாளின் பேத்தி. அவளும் அதே வீட்டில் தான் இருக்கிறார். வேலனும் வள்ளியும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். விசாலட்சியின் மகன் ராகவன் வள்ளியை விரும்புகிறான்.
விசாலாட்சியின் சகோதரன் சிங்கப்பெருமாளின் மகள் நந்திதா. தான் வள்ளியைக் காதலிப்பதாக வேலனிடம் ராகவன் சொல்கிறான். ஆனால், வேலனோ, ராகவன் நந்திதாவைக் காதலிப்பதாக விசாலாட்சி அம்மாவிடம் மாற்றிச் சொல்கிறான்.
அதையடுத்து ராகவனுக்கும், நந்திதாவுக்கும் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்கிறார் விசாலாட்சி. இதனால், வேலன் மீது கடும் கோபம் கொள்கிறான் ராகவன். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.
இத் தொடரில் சோனா நாயர் (விசாலாட்சி), சபரி (வேலன்), கோமதி பிரியா (வள்ளி), சத்யா (ராகவன்), வாசுவிக்ரம் (சிங்கபெருமாள்), நிஹாரிகா (நந்திதா) மற்றும் பலர் நடிக்கிறார்கள்.