தமிழும் சரஸ்வதியும் - விஜய் டிவியில் புதிய தொடர்

ஸ்டார் விஜய் டிவியில் பல தொடர்களும், பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைகளாக உள்ளன.

அந்த வரிசையில் தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற புதிய தொடரை வரும் ஜுலை 12ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகும்.

சரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண்.  ஆனால், படிப்பில் பன்னிரெண்டாம் வகுப்பைக் கூட முடிக்க முடியாமல் போனது குறித்து கவலையுடன் இருப்பவர்.  சரியாகப் படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

தமிழ் என்ற  தமிழ்ச் செல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவர்.  சூழ்நிலை காரணமாக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி, சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர் தமிழ். அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.  

பல தொடர்களில் நடித்துளள நட்சத்திரா, இத்தொடரி சரஸ்வதியாக நடிக்கிறார்.  விஜய் டிவியில் ஒரு காலத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தீபக் இத்தொடர் மூலம் மீண்டும் விஜய் டிவிக்குத் திரும்புகிறார். 

தமிழில் அம்மா கோதை ஆக மீரா கிருஷ்ணன்,  தமிழின் அப்பா நடேசனாக ராமச்சந்திரன், சரஸ்வதியின் அப்பா சொக்கலிங்கமாக பிரபு, சரஸ்வதியின் அம்மா சந்திரலேகாவாக ரேகா, மற்றும் பலர் நடித்துள்ளனர். 

விகடன் டெலிவிஸ்டா தயாரிக்கும் இத்தொடரை எஸ்.குமரன் இயக்குகிறார்.