விஜய் டிவி - 'சூப்பர் சிங்கர் 8' இன்று இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 8’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று செப்டம்பர் 26, மதியம் 3 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் இந்நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறந்த 20 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் இருந்து “முத்து சிற்பி, ஸ்ரீதர் சேனா, பரத், அபிலாஷ், அனு, மானசி” ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீதர் சேனா, மானசி வைல்டு கார்டு மூலம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

இறுதிப் போட்டியில் ஹரிஷ் கல்யாண், புகழ், ஷிவாங்கி, மற்றும் குக் வித் கோமாளி குழுவினர் சில கலை நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளனர்.

சூப்பர் சிங்கர் 8 போட்டியின் நடுவர்களான அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்பிபி சரண் ஆகியோரைத் தவிர கே.எஸ் .சித்ரா, மால்குடி சுபா, கல்பனா, அனந்த் வைத்திய நாதன் ஆகியோரும் சிறப்பு நடுவர்களாக இன்றைய இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.

சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு மகுடம் சூட்ட உள்ளார்.

விஜய் டிவியில் இன்று மதியம் 3 மணி முதல் நேரடி ஒளிபரப்பு நடைபெற உள்ளது.