• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home TV / OTT

TV / OTT

விஜய் டிவி - புதிய தொடர் ‘பாவம் கணேசன்’

Television
JAN-05-2021

ஸ்டார் விஜய் டிவியின் புதிய மெகா தொடர் ‘பாவம் கணேசன்’  ஜனவரி 4 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

நகைச்சுவை மற்றும் குடும்பக் கதையாக ஒரு தனித்துவமான கதைக்களத்தைக் கொண்ட தொடர்தான் இது. ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் டிவி நேயர்களைக் கவர்ந்திழுக்கும் விதத்தில் இத்தொடரை உருவாக்கி இருக்கிறார்களாம்.

‘பாவம் கணேசன்’ ஒரு நேர்மையான இளைஞனைப் பற்றிய கதை. கணேசன்  மிகவும் அப்பாவி, அதனால் அவரது அப்பாவித்தனத்தைக் குறிக்கும் வகையில் ‘பாவம்’ கணேசன் என்றே அழைக்கிறார்கள். அவர் உண்மையில் கடின உழைப்பாளி மற்றும் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர்.  அனைவருக்கும் எந்த நிபந்தனையின்றி உதவவும் நேசிக்கவும் தெரிந்தவர்.  அவர்தான் தன் குடும்பத்தை கட்டிக்காக்கும் ஒரே தலைமகன்.  

பொறுப்புகளை நிர்வகிக்க கடுமையாக பாடுபடும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் ஏராளம். அவ்வளவு தியாகங்களைச் செய்யும் அவர் தனது குடும்பத்தையும் காப்பாற்றி தானும் மகிழ்ச்சியுடன் வாழமுடியுமா என்பதுதான் இத்தொடரின் கதை.  

கணேசன் கதாபாத்திரத்தில் ‘கலக்கப் போவது யாரு’ புகழ்  நவீன் நடிக்கிறார். ஸ்டார் விஜய்யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ‘கலக்கபோவத்து யாரு சீசன் 5’ ல் பங்கேற்றவர் நவீன். மேலும் அவர் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அனிலா, நேத்ரான் மற்றும் பலர் இத்தொடரில் நடிக்கின்றனர்.  

‘பாவம் கணேசன்’ தொடர், ஸ்டார் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

More Recent News

Previous News புத்தாண்டில் புதிய படங்களுடன் ஜீ திரை Television JAN-05-2021
Next News ஜீ தமிழ் மகாசங்கமம் - ஒன்றிணையும் ‘சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ Television JAN-07-2021
Latest NewsView All
  • ஜனவரி 15ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-15-2021
  • மாஸ்டர் - முதல் நாள் வசூல் 25 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    NEWS JAN-14-2021
  • ‘நாற்காலி’ படத்தின் ‘எம்ஜிஆர்’ பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்

    NEWS JAN-14-2021
  • ஜனவரி 14ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-14-2021
  • இன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...

    NEWS JAN-14-2021
  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2020, s4s. All Rights Reserved