விஜய் டிவியில் ஆகஸ்ட் 16 முதல் இரண்டு புதிய தொடர்கள்

விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.

மதியம் 2.30 மணிக்கு ‘நம்ம வீட்டுப் பொண்ணு’, மதியம் 3 மணிக்கு ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ ஆகிய தொடர்கள் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளன. 

நம்ம வீட்டு பொண்ணு 

நகைச்சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த ஒரு குடும்பத் தொடர். சுதந்திரமாக செல்லமாக வளர்ந்த இளம் பெண் மீனாட்சி மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்களின் சுவையான கதை.  

ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்த மீனாட்சி, மற்றும் கூட்டுக் குடும்பத்தில் குடும்ப உறவுகள் சூழ்ந்த சூழலில் பிறந்து வளர்ந்த கார்த்திக், எப்படி தங்கள்  வாழ்க்கையைத் தொடங்குகின்றனர் என்பதுதான் சுவையான கதை.  

மீனாட்சியும் கார்த்திக்கும் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தால் என்ன நடக்கும் ?, அவர்கள் திருமணமான தம்பதிகளாக மாறினால் உண்மையில் என்ன நடக்கும் ?. 

ஒற்றைக் குழந்தையாக வளர்க்கப்பட்ட மீனாட்சி,  கூட்டுக் குடும்பச் சூழ்நிலையை மாற்றியமைத்து கையாள முடியுமா ?. இப்படி சில எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ள இத்தொடரில்  சுர்ஜித் (கார்த்திக்), அஷ்வினி (மீனாட்சி), ரவி (வேலு), நித்யா (விசாலாட்சி) மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தென்றல் வந்து என்னை தொடும் 

அபிநயா மற்றும் வெற்றியைச் சுற்றி நடக்கும் கதை. அபிநயா கோவிலில் வெற்றியை சந்திக்கிறார். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் விதி அவர்களை ஒன்றிணைக்கிறது. அபிநயா கலாச்சாரம் மற்றும்  பாரம்பரியத்தை  மதித்து நடப்பவள். 
வெற்றியின் மனைவியாக அவனது  வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறாள்.  வெற்றி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வாரா ?, அபிநயாவால் வெற்றியின் முரட்டு சுபாவத்தைக்  கையாள முடியுமா, அவள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளை சமாளிக்க முடியுமா ?, என பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ள தொடர். 

இத்தொடரில்,  பவித்ரா (அபிநயா), வினோத் பாபு (வெற்றி),  தர்ஷிகா (ராதா), ஆடிட்டர் ஸ்ரீதர் (சங்கர் நாராயணன்), எல்.ராஜா (ரங்கசாமி), பிரியா (கமலா) மற்றும் பலர் நடிக்கின்றனர்.