விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா.

அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.

அந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அந்நிகழ்ச்சியில் நயன்தாராவின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா டிவிக்குத் தரும் பேட்டி இது.

விஜய் டிவியின் மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி அவரைப் பேட்டி காண்கிறார்.

இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள், ரசிகைகளும் பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.

சிறப்பு விருந்தினர்கள், உணர்வுபூர்வமான விஷயங்கள் என பல வித நிகழ்வுகள் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளதாம்.

வரும் ஞாயிறு, ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அன்றைய தினம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்...

காலை 9 மணிக்கு

பட்டிமன்றம் - சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா ? பெண்களா ?

டாக்டர் ஞானசம்பந்தம் நடுவராக இருக்க, பிரபல பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிற்பகல் 12.30 மணிக்கு

நீயா நானா 

மதியம் 3 மணிக்கு

பரமபதம் விளையாட்டு

த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம்...உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...