விஜய் டிவி - ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’, புதிய சீசன் இன்று முதல் ஆரம்பம்

விஜய் டிவியில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ இன்று முதல் புதிய  மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியின் மற்றொரு நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் இந்த ‘சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் இரண்டிரண்டு பேராக இணைந்து கலக்க உள்ளார்கள்.

ஆதவன் - ஜெயச்சந்திரன்
அசார் - டிஎஸ்கே
அமுதவாணன் - பழனி பட்டாளம்
நவீன் - சரத்
சதீஷ் - ராஜவேலு
பாலா - வினோத்
ராஜா -யோகி
ராமர் - நிஷா 
 
ஆகியோர்தான் போட்டியாளர்கள்.

அர்ச்சனா, ரோபோ சங்கர், மதுரை முத்து ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

ஈரோடு மகேஷ், மைனா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.

இன்று பிப்ரவரி 20 ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும்.