விஜய் டிவியில் ‘சின்ன கலைவாணர் விவேக்’ சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்களில் தன்னுடைய நகைச்சுவையை நல்ல பல கருத்துகளுடன் பகிர்ந்து சினிமா ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தவர் விவேக்.

கடந்த ஏப்ரல் மாதம் அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது நினைவைப் போற்றும் வகையில் விஜய் டிவி ‘சின்ன கலைவாணர் விவேக்’ என்ற பெயரில் ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

வரும் ஞாயிறு, ஆகஸ்ட் 29ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நகைச்சுவை நடிகர்கள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களுடன் விஜய் ஸ்டார்ஸ் குழுவினரும் கலந்து கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்யவிருக்கிறார்கள்.