விஜய் டிவி - ‘பிக் பாஸ் சீசன் 6’ முன்னோட்ட வீடியோ வெளியீடு

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 

இந்த வருடத்திற்கான ‘பிக் பாஸ் சீசன் 6’ன் முன்னோட்ட வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய 5 சீசன்களைப் போலவே 6வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார். 

இன்று வெளியான முன்னோட்ட வீடியோவில் ‘வேட்டைக்கு ரெடியா’ எனக் கூறியுள்ளார். 

முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சுவாரசியமான போட்டியாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. பொது மக்களிலிருந்து ஒருவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இந்த வருடம் வழங்கப்படுகிறது. 

சீசன் 6 எப்போது ஆரம்பமாகும் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.