6வது விஜய் டெலிவிஷன் விருதுகள், ஏப்ரல் 18 மதியம் 3 மணிக்கு...

தமிழ்த் தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடத்தில் தனி மதிப்பைப் பெற்றுள்ள விஜய் டிவி அவர்களது டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் வழங்கி வருகிறது.

ஆறாவது வருடமாக இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் ஒளிபரப்பு வரும் ஞாயிறு ஏப்ரல் 18ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

30 வகை விருதுகள், நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பல சுவாரசியமான நிகழ்வுகளை அன்று காணலாம். திவ்யதர்ஷினி மற்றும் மகாபா ஆனந்த் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள். 

சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த தாய், சிறந்த தந்தை, சிறந்த மாமியார், சிறந்த மருமகள், சிறந்த மகன், சிறந்த மகள், சிறந்த சீரியல், பிடித்த குடும்பம், சிறந்த துணை நடிகர் ஆண், சிறந்த துணை நடிகை பெண், சிறந்த நகைச்சுவைக் கலைஞர், சிறந்த வில்லன், திரையில் பிடித்த ஜோடி, வளரும் இளம் ஜோடி, சிறப்பு விருது குழந்தை, ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த புகைப்பட இயக்குனர், சிறந்த எழுத்தாளர், சிறந்த இசை இயக்குனர், சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் - ஆண் & பெண், சிறந்த ஜோடி தொகுப்பாளர்கள், சிறந்த பாடகர், பிடித்த விளையாட்டு நிகழ்ச்சி, சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி, பிடித்த நிகழ்ச்சி என்று ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 'முல்லை' கதாபாத்திரத்தில் நடித்த நேயர்களின் அபிமான நடிகையாக இருந்து மறைந்த  சித்ராவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதை சித்ராவின் பெற்றோர்கள்  பெற்றுக்கொண்டனர். இது பார்வையாளர்களை கண்ணீரில் மூழ்கடித்தது.  சித்ராவிற்கு அர்ப்பணித்த இந்த விருது ஒவ்வொரு அபிமான ரசிகரின் சார்பாகவும் வழங்கப்பட்டது.

மேலும், பெண் கலைஞர்கள் தங்கள் கலையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டத்திற்காக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.  பெண்மையை போற்றவும் தாய்மையை போற்றவும் விருதுகள் வழங்கப்பட்டது.  இதில் மானசா, ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ) அடங்குவர்.  

 நீயா நானா கோபிநாத், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி (ஸ்டாலின்), நடிகர் ரஞ்சித் ஆகியோருக்கு அவர்களின் சமூக பங்களிப்பிற்காக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.