விஜய் டிவியில் ‘சிங்கிள் பொண்ணுங்க’, வார இறுதி சிறப்பு நிகழ்ச்சி

விஜய் டிவியில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் வார இறுதி நிகழ்ச்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தவைகளாகவே இருக்கின்றன.

சமீப காலமாக சில சிறப்பு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது விஜய் டிவி.

வரும் ஜூலை 11, ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணிக்கு ‘சிங்கிள் பொண்ணுங்க’ என்ற ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மூன்றரை மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப உள்ளது.

இந்த சிறப்பு நிகழ்வில், எட்டு திறமையான பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் மிகவும் திறமையான மற்றும் தகுதியான ‘சிங்கிள் பெண்’ யார் என்பதை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.  

நிகழ்ச்சியில் பல சுவாரஸசியமான பகுதிகள் உள்ளன, அதில் பெண்கள் தங்கள் இதயத்தில் உள்ளதைப் பேசவும், குறிப்பிட்ட போட்டிகளை வெல்லவும் தயாராகிறார்கள்.  ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சொந்த பாணியில் நடுவர்களை கவரும் விதம் முன்மொழிய வேண்டும், சிலர் வார்த்தைகளில் வெளிப்படுத்துவர், சிலர் நடனம் அல்லது நாடகம் போன்ற செயல்கள் செய்வர் . 

வேடிக்கையான இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், மணிமேகலை தொகுத்து வழங்குகிறார்கள்.

போட்டியாளர்கள் காவ்யா, ரித்திகா, ஜனனி அசோக் குமார், சுனிதா, திவ்யா கணேஷ், அர்ச்சனா வி.ஜே, ஸ்ரீனிதி, தர்ஷா, ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நடுவர்களாக  அருண், சாம் விஷால், தீனா, பாலா, சரவணன் பி.எஸ் ஆகியோரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ராமர், தங்கதுரை, வி.ஜே.விஜய் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். .