அமேசான் - பொங்கலுக்கு வரும் ‘புத்தம் புது காலை விடியாதா’

அமேசான் ஓடிடி தளத்தில் வரும் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதியன்று ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற 5 அத்தியாயங்கள் கொண்ட குறும்படங்களின் தொகுப்பு வெளியாக உள்ளது.

பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி, சூர்யா கிருஷ்ணா இயக்கத்தில், ஐஸ்வர்யா லெட்சுமி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G   கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந், டீஜே அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

கொரானோ தாக்கத்தின் இரண்டாவது அலையின் போது நடப்பதாக இக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

“முகக்கவச முத்தம், லோனர்ஸ், நிழல் தரும் இதம், தி மாஸ்க், மௌனமே பார்வையாய்” ஆகியவை தான் ‘புத்தம் புது காலை விடியாதா’வில் இடம் பெற உள்ள 5 அத்தியாயங்கள்.  

இவற்றின் இயக்குனர்கள் அவர்களது படங்களைப் பற்றி கூறுகையில்,

முகக்கவச முத்தம்

இயக்குனர் பாலாஜி மோகன் 

முகக்கவச முத்தம், தொற்றுநோயால் சிதைந்த காதல் மற்றும் ஏக்கம் ஆகிய இரண்டு அடிப்படை உணர்வுகளை ஒன்றாக இணைத்துள்ளது. கௌரி மற்றும் டீஜேயின் கதாபாத்திரங்கள் மூலம், கடினமான நேரங்களிலும் காதலுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், நாம் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். இது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை தொடர்புபடுத்தும் ஒரு கதை. 

லோனர்ஸ்

இயக்குனர் ஹலிதா ஷமீம்

தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் நம்மை மிகவும் எதிர்பாராத இடங்களில் தொடர்புகளையும் ஆதரவையும் கண்டுபிடிக்க எப்படித் தள்ளியது என்பதுதான் எனது கதை. குறிப்பாக தனியாக இருக்கும் போது திடமாக இருப்பது. லோனர்ஸ் இரண்டு அற்புதமான நடிகர்களான லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் இதயத்தை கவர்ந்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மௌனமே பார்வையாய் 

இயக்குனர் மதுமிதா 

இந்த இரண்டு வருட லாக்டவுன்கள் மற்றும் தனிமைப்படுத்தல்கள், உறவுகள் குறித்தவற்றை மதிப்பிடச் செய்யவும், மறு மதிப்பீடு செய்யவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. நதியா மொய்து மற்றும் ஜோஜு ஜார்ஜ் இருவரும் தனியாக வாழும் நடுத்தர வயது தம்பதிகளுக்கு இடையேயான உறவு குறித்த எனது கண்ணோட்டத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. 

நிழல் தரும் இதம் 

இயக்குனர் ரிச்சர்ட் ஆண்டனி 

ஐஸ்வர்யா, தன்னைக் கண்டறியும் உள்நோக்கிய பயணத்தின்போது சந்திக்கும் உணர்ச்சிகரமான, ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்கும்போது, தொற்றுநோய் அவரது கதாபாத்திரத்திற்கு எத்தகைய பின்னணியை ஏற்படுத்துகிறது என்பது குறித்தது. இந்த பரபரப்பான காலங்கள் பலருக்கு மிகவும் கடினமாக இருந்தது.  பார்வையாளர்கள் அவரது உணர்வுகளை மிக நெருக்கமாக உணருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

தி மாஸ்க் 

இயக்குனர் சூர்யா கிருஷ்ணா

தொற்றுநோய் நம்மை தனித்துவமான சூழ்நிலைகளில் தள்ளியுள்ளது என்பதையும், சில சமயங்களில், அது நேர்மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நமக்கு உதவியது என்பதையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன். சனந்த் மற்றும் திலீப்பின் கதாபாத்திரங்கள் ஒரு மாறுபட்ட சந்திப்பைக் கொண்டுள்ளன. இந்த கோவிட் நோயின் விளைவு மற்றும் அதன் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகளை இது வெளிப்படுத்துகிறது.