• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home TV / OTT

பெப்ஸி தொழிலாளர்களுக்கு ‘நவரசா’ மூலம் மணிரத்னம் உதவி

Television
JAN-19-2021

கொரோனா அச்சுறுத்தலால் தமிழ் திரையுலகானது  கடுமையான மற்றும் நீண்ட கால பாதிப்பினால் திணறி வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரின் முயற்சியால் தமிழ் திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் ஆதரவையும் மறுவாழ்வையும் பெற்றிருக்கிறார்கள். 

இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, கடந்த 2020 அக்டோபரில் இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர், தமிழ் சினிமாவின் படைப்பாளர்களை ஒன்றிணைத்து, தனித்துவமான ஒரு திட்டத்தை அறிவித்தனர். 

முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்காக ஒன்பது திரைப்படங்கள் கொண்ட  ஆந்தாலஜியாக ‘நவராசா’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஆந்தாலஜி மூலம் திரையுலகை உயிர்ப்பிக்க தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள். அதோடு, தமிழ் திரையுலகில் தேவைப்படுபவர்களுக்கு உதவ பல கோடி நிதி திரட்டப்படுகிறது. 

இந்த புது முயற்சி குறித்து இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரும் குறிப்பிடும்போது, 

“எதிர்பாராத இச்சூழலின் போது  ஆதரவை வழங்குவதற்காக தொழில்துறையை ஒன்றிணைத்ததால்  ‘நவராசா’ ஆந்தாலஜியானது உண்மையிலேயே ஒற்றுமையின் ஒரு பிரதிபலிப்பு என்றே கூறலாம். இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது தகுதியுடைய 10,000-க்கும் மேற்பட்ட திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும்  சென்றடைய இருப்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியடைகிறோம். 

இப்பணியானது வருகிற பிப்ரவரி மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் திறம்பட அடையாளம் காணவும், அடையவும், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்.கே.சல்வமணியின் உதவியை நாடினோம். 

இந்த நிவாரணத்தை ஒவ்வொரு தொழிலாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் வழங்குவதற்காக உதவித் திட்டத்திற்காக, பேரழிவு நிவாரணத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பூமிகா டிரஸ்டுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். அதோடு,  இந்த நிவாரணம் மூலம் தொழில் மீண்டும் வலுவாக வளரும் என நம்புகிறோம்.  மேலும், எல்லா இடங்களிலும் ரசிகர்கள் விரும்பும் படைப்புகள் தொடர்ச்சியாக உருவாக உதவும் என்று நம்புகிறோம்” என்கிறார்கள்.

More Recent News

Previous News கலர்ஸ் தமிழ் - நாகினி 5, புதிய தொடர் ஜனவரி 21 முதல்... Television JAN-19-2021
Next News ஜீ தமிழ் - மார்ச் மாதம் வரை ‘மகா சங்கமம்’ Television JAN-20-2021
Latest NewsView All
  • மார்ச் 3ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-03-2021
  • மார்ச் 2ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS MAR-02-2021
  • சென்னை திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’

    NEWS MAR-01-2021
  • 5 மொழிகளில் வெளியாகும் ‘மட்டி’

    NEWS MAR-01-2021
  • என் மகளுடன் நடித்தது நல்ல அனுபவம் - அருண் பாண்டியன்

    NEWS MAR-01-2021

You May Like   

  • Chakra / சக்ரா (2021)

  • Kamali From Nadukkaveri / கமலி from நடுக்காவேரி (2021)

  • Sillu Vandugal / சில்லு வண்டுகள் (2021)

  • Pazhagiya Naatkal / பழகிய நாட்கள் (2021)

  • Aangal Jakkirathai / ஆண்கள் ஜாக்கிரதை (2021)

  • Loga / லோகா (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved