• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home TV / OTT

TV / OTT

விஜய் சேதுபதி நடிக்கும் ஓடிடி படம் ‘முகிழ்’

Television
JAN-05-2021

கொரானோ ஊரடங்கு கடுமையாக அமலில் இருந்த கடந்த வருட சமயத்தில் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் நேரடியாக வெளியாகின. ஓடிடிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓரிரு படங்களும் வெளிவந்தன.

இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அவருடைய தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘முகிழ்’ என்ற ஓடிடி படத்தைத் தயாரித்து நடிக்கிறார்.

இப்படத்தில் அவருடைய ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் யு டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குனர் கார்த்திக் கூறுகையில்,

“ரொம்ப லைவ்-ஆன படம் இது. விஜய் சேதுபதி டிரைலரைப்  பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். 

“இந்த டிரைலர் என்னை நிறைய பேச வைத்துள்ளது, எல்லாம் இந்தப் படம் செய்த வேலை. ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு" என்றார் விஜய் சேதுபதி. அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும். 

ரெஜினா கசான்ட்ரா இப்படத்திற்காக அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால்  மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். 

ஒரு பெற்றோர் ஒரு  குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள், அந்தக் குழந்தையாலும் அந்தக் குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப் பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது" என்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் இசை அமைப்பாளராக ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார்.  

ஒளிப்பதிவாளராக சத்யா பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் ‘கழுகு’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்திற்கு ஒளிப்பிதிவு செய்திருக்கிறார். 

‘96’ படத்தின் எடிட்டிங்  மூலம் மக்களின் மனதில் பதிந்து எடிட்டர் கோவிந்தராஜ் இப்படத்தில்  எடிட்டராக பணியாற்றியுள்ளார். 

இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

 

More Recent News

Previous News கலர்ஸ் தமிழ் - ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர் Television JAN-04-2021
Next News புத்தாண்டில் புதிய படங்களுடன் ஜீ திரை Television JAN-05-2021
Latest NewsView All
  • ஜனவரி 15ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-15-2021
  • மாஸ்டர் - முதல் நாள் வசூல் 25 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    NEWS JAN-14-2021
  • ‘நாற்காலி’ படத்தின் ‘எம்ஜிஆர்’ பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்

    NEWS JAN-14-2021
  • ஜனவரி 14ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-14-2021
  • இன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...

    NEWS JAN-14-2021
  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2020, s4s. All Rights Reserved