கலர்ஸ் தமிழ் - 2021 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்...
14 ஜனவரி 2021, வியாழக்கிழமை
காலை 8 மணி
பஜன் சாம்ராட் - பக்தி ரியாலிட்டி ஷோ
(14ம் தேதி முதல் 16ம் தேதி வரை)
12 போட்டியாளர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி. அவர்களில் சிறந்த பாடகலை கர்னாடக இசைக் கலைஞர்கள் ஆர்.கணேஷ், மகதி நடுவர்களாக இருந்து தேர்வு செய்ய உள்ளார்கள். சிறப்பு விருந்தினர்களாக கடம் உமா சங்கர், குடந்தை சரவணன், சுசித்ரா பாலசுப்ரமணியன் பங்கேற்கிறார்கள்.
இரவு 9.30 மணி
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து வழங்கும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி 15ம் தேதியும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இரவு 10 மணி
நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் நிகழ்ச்சி
16 மற்றும் 17 ஜனவரி 2021
நண்பகல் 12 மணி
கலர்ஸ் கிச்சன்
பண்டிகை கால சிறப்பு உணவுகளை போட்டியாளர்கள் சமைக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தாமு தர்பார் பிரிவில் புகழ்பெற்ற சமையல்கலை நிபுணர் செப் தாமு பொங்கல் சிறப்பு உணவாக தேங்காய் பால் புலாவ் மற்றும் மசாலா டோஸ்டட் சாண்ட்விட்ச் ஆகிய உணவுகளையும், விஐபி வீட்டு சமையல் பிரிவில் நடிகை ரேகா சுரேஷ் மற்றும் அகிலா கிருஷ்ணன் ஆகியோர், உடைச்சகடலை வடை மற்றும் இட்லி மட்டன் சுக்கா ஆகிய தனித்துவமான உணவுகளை சமைக்க உள்ளார்கள்.
15ந்தேதி மாலை 7.30 மணிக்கு இத்தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற தொடரான நடிகை தேவதர்ஷினி நடிக்கும் ‘அம்மன்’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் உச்சமாக 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் மாலை 8.30 மணிக்கு நடிகை நான்சி ஜெனிபர் நடிக்கும் ‘இதயத்தை திருடாதே’ தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த தொலைக்காட்சியின் புத்தம் புதிய தொடரான ‘சில்லுனு ஒரு காதல்’ தொடர் ஒளிபரப்பாகும்.
மேலும், 17ம் தேதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.