கலர்ஸ் தமிழ் - இன்று ‘இவன் யாரென்று தெரிகிறதா, நளனும் நந்தினியும்’ ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் இன்று, செப்டம்பர் 5, ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘இவன் யாரென்று தெரிகறதா’, நளனும் நந்தினியும்’ ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
 
விஷ்ணு, வர்ஷா பொல்லம்மா, இஷாரா நாயர் மற்றும் பலர் நடிக்க S.T. சுரேஷ் குமார் இயக்கத்தில் 2017ல் காதல் கதையாக வெளிவந்த படம் ‘இவன் யாரென்று தெரிகிறதா’. கல்லூரி பட்டதாரியான அறிவு (விஷ்ணு), மனம் கவர்ந்த காதலி ஒருவர் வேண்டும் என்ற தீவிர தேடலில் ஈடுபடுவதை சுற்றி இப்படத்தின் திரைக்கதை நகர்கிறது. காதலர் தினத்தன்று ஒரு கேர்ள் பிரெண்ட் கூட இல்லையென்று நண்பர்கள் கேலி செய்ய, முடிந்தவரை விரைவாக தனக்கென்று ஒரு கேர்ள் ஃபிரண்ட்-ஐ கண்டறிவதற்கு தனக்கே ஒரு சவாலை அறிவு நிர்ணயித்துக் கொள்கிறார். அவருக்கேற்ற மிகப் பொருத்தமான காதலியை கண்டறிவதற்கான அவரது முயற்சிகளும், போராட்டங்களும்தான் இப்படம். 
 
வெங்கடேசன் R இயக்கத்தில் மைக்கேல், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்த படம் ‘நளனும் நந்தினியும்’. தங்களது குடும்பத்தினர் அறிவுறுத்தலை மீறி திருமணம் செய்து கொண்டு பெரு நகரத்திற்கு புலம் பெயரும் இரு இளம் காதலர்களான நளன் மற்றும் நந்தினியின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சுற்றிய கதைதான் இந்தப் படம். வேலையும் இல்லாமல், ஆதரவளிப்பதற்கு யாருமில்லாமல் சிக்கலான சூழலை எதிர்கொள்கிறார்கள் இளம் தப்தியினர். இந்த பின்னடைவை அவர்கள் எப்படி சமாளித்து காதலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுகின்றனர் என்பது மீதி கதை. 

பிற்பகல் 1 மணிக்கு ‘இவன் யாரென்று தெரிகிறதா’, மாலை 4 மணிக்கு ‘நளனும் நந்தினியும்’ ஒளிபரப்பாகின்றன.