கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் இன்று, செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘யானும் தீயவன்’ மற்றும் ‘பறந்து செல்ல வா’ ஆகிய 2 திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.
2017-ம் ஆண்டு வெளிவந்த ‘யானும் தீயவன்’ ஒரு அதிரடி கிரைம் திரில்லர் படம். அறிமுக இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர் இயக்கத்தில், அஸ்வின் ஜெரோம், வர்ஷா பொல்லம்மா, ராஜு சுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு இரக்கமற்ற தொடர் கொலைகாரனைப் பற்றிய கதைதான் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவனுடைய கொடூரமான குற்றங்களைப் பார்த்த ஜோடி ஒன்றை அவன் கடத்துகிறான். அவனிடம் இருந்து அந்த ஜோடி எப்படி தப்பியது என்பதே படத்தின் கதையாகும்.
2016ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தனபால் பத்மநாபன் இயக்கி உள்ள இப்படத்தில் லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கெங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு அழகான காதலியைக் கண்டுபிடிக்க முடியாமல் தனது நண்பர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளாகும் ஒரு அழகான இளைஞன் சம்பத் (லுத்புதீன்). தனது ‘கெத்’தைக் காட்ட ஆன்லைனில் ஒரு கற்பனையான காதலியை உருவாக்குகிறான்.
இதற்கிடையில், அவனது பெற்றோர் அவனுக்கு மாதவி (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண்ணை திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கொருவர் அன்பை வளர்க்கிறார்கள். அப்போது சம்பத்தின் கற்பனை கதாபாத்திரம் அவனது வாழ்க்கையில் திடீரென நுழைகிறாள். இதன் காரணமாக அவனது வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இன்று செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு ‘யானும் தீயவன்’, மற்றும் மாலை 3.30 மணிக்கு ‘பறந்து செல்ல வா’ ஆகிய படங்களைக் காணலாம்.