கலர்ஸ் தமிழ் - ஆகஸ்ட் 15ல் ‘வர்மா, ஸ்டைல்’ படங்கள் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் டிவியில் வரும் ஞாயிறு ஆகஸ்ட் 15ம் தேதியன்று சண்டே சினி காம்போவில் ‘ஸ்டைல், வர்மா’ ஆகீய இரண்டு படங்கள் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘ஸ்டைல்’ படத்தை பினு சதானந்தன் இயக்கியுள்ளார். உன்னி முகுந்தன், டொவினோ தாமஸ், பாலு வர்கீஸ், மாஸ்டர் இல்ஹான், பிரியங்கா கந்த்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தியா (பிரியங்கா கந்த்வால்) என்ற இளம் பெண் மீது, ஒரு இளம் ஆட்டோமொபைல் மெக்கானிக்-ஆன டாம் (உன்னி முகுந்தன்) காதலில் விழுகிறார். அவர்களது வாழ்க்கையில் அந்நிய நபரான எட்கர் (டொவினோ தாமஸ்) நுழையும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. பூனை மற்றும் எலி விளையாட்டு போல டாம் மற்றும் எட்கர் இடையில் நிகழும் மோதல்களும், நிகழ்வுகளும் தான் இப்படத்தின் கதை.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் முதல் ரீமேக் படமாக இப்படம் தயாரானது. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம், மேகா சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்து முடித்தபின் இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நிறுத்திவிட்டனர். அதன்பின் கடந்த வருடம் இப்படம் டிஜிட்டல் தளங்களில் வெளியானது.  

மருத்துவக் கல்லூரியில் தனக்கு ஜுனியரான மேகா (மேகா சௌத்ரி) வர்மா (துருவ் விக்ரம்) காதலில் விழுகிறார். நாட்கள் செல்லச் செல்ல மேகாவுக்கும், வர்மாவுக்கு இடையில் கசப்பும், பிரிவும் ஏற்பட, மேகாவின் குடும்பத்தினரால் தேர்வு செய்யப்பட்ட மாப்பிள்ளையை மேகா திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகுக்கிறது. அதன் பிறகு, தனிமையில் வாடும் வர்மா பின் போதைக்கு அடிமையாகி அவரது வாழ்க்கை தடம் புரள்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.