கலர்ஸ் தமிழ் - நாளை ‘ஆன் மரியா, ராஜாவுக்கு செக்’ படங்கள் ஒளிபரப்பு...

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சன்டே சினி காம்போவில் நாளை, ஆகஸ்ட் 8ம் தேதி ‘ஆன் மரியா, ராஜாவுக்கு செக்’ ஆகிய படங்கள் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளன.

மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘ஆன் மரியா’ படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி உள்ள இப்படத்தில் சாரா அர்ஜூன், சன்னி வெய்ன், அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

10 வயது ஆன் மரியாவுக்கு (சாரா அர்ஜுன்) அவரது பி.டி. மாஸ்டர், சில பிரச்சினைகளைத் தருகிறார். அவருக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கிரிஷ் (சன்னி வெய்ன்) உதவியை நாடுகிறார் ஆன். இவர்களுக்கு இடையிலான நட்பும் அதனால், இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களே இப்படத்தின் கதை. துல்கர் சல்மான் இப்படத்தில் ளெரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.     

சாய் ராஜ்குமார் இயக்கத்தில், சேரன், இர்பான், சிருஷ்டி டாங்கே, சரயு மோகன், நந்தனா வர்மா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ராஜாவுக்கு செக்’.  

இன்ஸ்பெக்டர் சேரனின் டீன் ஏஜ் வயது மகளை சிலர் கடத்திவிடுகிறார்கள். மகளைக் கடத்தியது யார் என்பது சேரனுக்குத் தெரியும். ஆனால், அவரால் வெளியில் செல்ல முடியாத அவரை வீட்டிற்குள்ளேயே மடக்கி வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள். இந்த சூழ்நிலையில் தனது மகளை சேரன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 

மதியம் 1 மணிக்கு ‘ஆன் மரியா’ படமும் மாலை 4 மணிக்கு ‘ராஜாவுக்கு செக்’ படமும் ஒளிபரப்பாகிறது.