கலர்ஸ் தமிழ் - நாளை ‘நாயே பேயே, காலேஜ்குமார்’ படங்கள் ஒளிபரப்பு...

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஆகஸ்ட் 1, ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘நாயே பேயே, காலேஜ்குமார்’ ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘நாயே பேயே’ படம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த படம். சக்தி வாசன் இயக்கத்தில்  இதில் தினேஷ் குமார், ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஐஸ்வர்யாவை கடத்திச் செல்கிறார்கள். அவள் பெண் அல்ல பேய் என்பதை அவர்கள் பின்பு கண்டுபிடிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு ஹாரர் படம் இது. 

மாலை 4 மணிக்கு ‘காலேஜ் குமார்’ ஒளிபரப்பாக உள்ளது. கன்னடத்தில் 2017-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘காலேஜ் குமார்’ என்ற படம் அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

தனது முதலாளியால் அவமதிக்கப்பட்டதால், தனது மகனை சிறந்த ஆடிட்டராக உருவாக்க வேண்டும் என்று கனவு காணும் பியூன் வேலை செய்யும் பிரபுவின் லட்சியக் கனவைச் சுற்றி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.  பிரவுவின் மகன் ராகுல் விஜய் மீது பொய்ப் புகார் கூறி கல்லூரியிலிருந்து வெளியேற்றுகிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. மதுபாலா, நாசர் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.