கலர்ஸ் தமிழ் - நாளை ‘சூப்பர் டூப்பர், நட்புனா என்னன்னு தெரியுமா’ படங்கள்...

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஜுலை 18, ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் மு ‘சூப்பர் டூப்பர், நட்புனா என்னன்னு தெரியுமா’ ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சூப்பர் டூப்பர்’, ஒரு நகைச்சுவை த்ரில்லர் திரைப்பம். அருண் கார்த்திக் இயக்கத்தில், துருவா, இந்துஜா, ஷாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சிறு குற்றங்களில் ஈடுபடும் இரு நபர்கள், தவறான ஒரு பெண்ணை கடத்தியதற்குப் பிறகு சிக்கலான சூழலில் மாட்டிக் கொள்வதைச் சுற்றி கதை நகர்கிறது.  போதைப்பொருள் கடத்தும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவனை எதிர்கொண்டு சமாளிக்கும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.  அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் மீதிக்தை. 

‘நட்புனா என்னன்னு தெரியுமா’ என்பதை சிவக்குமார் இயக்க, கவின், ரம்யா நம்பீசன்,  ராஜு ஜெயமோகன், அருண்ராஜா காமராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படம். நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மூவர், ஒரே பெண் மீது காதல் கொள்ளும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதிரடி திருப்பங்களையும் சொல்கிறது இப்படம். ஒரு புதிய பிசினஸ் நிறுவனத்தைத் தொடங்க அந்த மூன்று பேரும் முழு மூச்சோடு தயாராக இருக்கும்போது அவர்கள் எதிர்கொள்கின்ற, முடிவே இல்லாத தடைகளால் என்ன நடக்கிறது என்பதும் மீதிக் கதை.

‘சூப்பர் டூப்பர்’ படம் மதியம் 1 மணிக்கும், ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ படம் மதியம் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.