கலர்ஸ் தமிழ் - இன்று ‘கேப்மாரி, அரண்மனை கிளி’ படங்கள் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ‘சன்டே சினி காம்போ’வில் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. 

அதில் இன்று ஜுன் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘கேப்மாரி’ படத்தையும் 3.30 மணிக்கு ‘அரண்மனை கிளி’ படத்தையும் ஒளிபரப்ப உள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்ல்யா மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த படம் ‘கேப்மாரி’. ஜெய் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர், மதுவுக்கு அடிமையானவர். இதன் காரணமாக 2 இளம் பெண்களான அதுல்யா, வைபவி ஆகியோருடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த முக்கோணக் காதலில் ஜெய் எப்படி சிக்கித் தவிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

ராஜ்கிரண் இயக்கி நாயகனகாவும் நடித்துள்ள படம் ‘அரண்மனை கிளி’. இளையராஜாவின் இசையமைப்பில், அஹானா, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். பெரிய பணக்கார வீட்டின் வேலைக்காரராக இருக்கும் ராஜ்கிரண், துரதிர்ஷ்டவசமாக விபச்சாரத்தில் தள்ளப்படும் நாயகியைக் காப்பாற்றுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இளையராஜாவின் இசையில் இனிமையான சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம் இது.