கலர்ஸ் தமிழ் - முதல் முறையாக ‘முடிஞ்சா இவன புடி, ஜருகண்டி’ படங்கள் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த ‘சண்டே சினி காம்போ’ என ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

அதன்படி கடந்த ஞாயிறு மே 30ம் தேதி ‘தாரை தப்பட்டை, மதுர வீரன்’ ஆகிய படங்களை ஒளிபரப்பினார்கள்.

வரும் ஞாயிறு ஜுன் 6ம் தேதி மதியம் 1 மணிக்கு ‘ஜருகண்டி’, மாலை 4 மணிக்கு  ‘முடிஞ்சா இவன புடி, ஆகிய படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த படம் ‘முடிஞ்சா இவன புடி’. ஆக்ஷன், நகைச்சுவை கலந்த படம் இது. ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு திருடன் ஆகியோரைச் சுற்றி நிகழும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

ஜெய், டேனியல் போப், ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், போஸ் வெங்கட், அமித் திவாரி மற்றும் பலர் நடிக்க ஏ.என்.பிச்சுமணி இயக்கிய படம் ‘ஜருகண்டி’. ஒரு டிராவல் ஏஜன்சியை ஆரம்பித்து போலி ஆவண  பிரச்சினையில் சிக்கும் நாயகனுக்கும், ஒரு காவல் துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை.