கலர்ஸ் தமிழ் - முதல் முறையாக ‘தாரை தப்பட்டை, மதுரை வீரன்’ படங்கள் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த ‘சண்டே சினி காம்போ’ என ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளார்கள்.

அதில் முதலாவதாக நாளை மே 30ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ‘மதுர வீரன்’ படத்தையும், மாலை 4 மணிக்கு ‘தாரை தப்பட்டை’ படத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள். 

‘மதுர வீரன்’ படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாகவும், மீனாட்சி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா படத்தை இயக்கியிருக்கிறார்.  

‘தாரை தப்பட்டை’ படம் இளையராஜாவின் இசைமைப்பில் வெளிவந்த 1000மாவது படம். பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இரண்டு படங்களுமே கிராமத்துக் கதைகள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.