கலர்ஸ் தமிழ் - நாளை ‘குபேரன், கோலி சோடா’ படங்கள் ஒளிபரப்பு...

கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஆகஸ்ட் 29, ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘குபேரன், கோலி சோடா 2’ ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

2020 ஆம் ஆண்டில் அஜய் வாசுதேவ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘குபேரன்’. மம்முட்டி, ராஜ்கிரண், மீனா, கலாபவன் ஷஜோன் மற்றும் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரணையும், நடிகை மீனாவையும் திரும்பவும் ஒன்று சேர்த்த திரைப்படம் இது. 

பாஸ் (மம்முட்டி) என்பவருக்கு கடன் பட்டிருக்கிறார் பிரதாபா (கலாபவன் சஜோன்).  தனது கடனை திரும்பச் செலுத்த மறுக்கும் பிரதாபா, பாஸை மோசடியாக ஏமாற்றுகிறார்.  பழிவாங்கத் துடிக்கும் பாஸ், பிரதாபாவின் வாழ்க்கையில் கடும் நாசத்தை விளைவிக்கிறார்.  அதன்பிறகு பாஸின் கடந்த கால வாழ்க்கை, பிரதாபாவுடன் கடைசியில் பிரச்சினையை பாஸ் எப்படி சரி செய்கிறார் என்பதுதான் இப்படம்.

2015 ஆம் ஆண்டில் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘கோலி சோடா 2’ விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த இப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், பரத் சீனி, இசக்கி பரத் மற்றும் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

மிகப் பெரிய சாவல்களை எதிர் கொள்கின்ற சாதாரண மனிதர்களைச் சுற்றி இக்கதை நகர்கிறது.  புதிய முகங்களை அறிமுகம் செய்ததற்காகப் பாராட்டுப்பெற்ற ‘கோலி சோடா 2’ திரைப்படத்தில் எட்டு திரைப்பட இயக்குனர்கள் நடிகர்களாக நடித்துள்ளனர். 

ஒரு டாக்சி டிரைவரான சிவன் (வினோத்), ஒரு ரௌடியான மாறன் (பரத் சீனி) ஒரு தடகள வீரரான ஒலி (இசக்கி பரத்) ஆகியோர், ஊழல் அரசியல்வாதிகள், ரௌடி கும்பல்களின் தலைவன்கள், சாதி பாகுபாடுகள் என அனைத்து தடைகளையும் மீறி, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு  எப்படி போராடுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. 

‘குபேரன்’ படம் மதியம் 1 மணிக்கும் ‘கோலி சோடா 2’ மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகிறது