கலர்ஸ் தமிழ் - ‘கன்னித் தீவு’ நிகழ்ச்சியில் நமீதா

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி ‘கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0’. 

‘கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0’ என்பது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  வரும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி. ராஜா ஜல்சானந்தா மற்றும் அவரது வசிப்பிடமான கன்னித்தீவில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பொங்க இது சித்தரிக்கிறது.  

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிற இந்நிகழ்ச்சியானது, நான்கு பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொன்றும் மற்றதைவிட அதிக கேளிக்கை நிறைந்ததாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.  பிரபல காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கருடன் பிரபல சின்னத்திரை கலைஞரும், நடிகையுமான மதுமிதா, பேபி மாதா என்ற கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.  

ராஜமாதாவாக நடிகை ஷகிலா, ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காராவாக அன்ன பாரதியும், மாதா ஜால்ராவாக நர்மதாவும், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாக அடாவடி அன்சர், மற்றும் கலையரசனாக நடிகர் அமுதவாணனும் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கின்றனர்.  

பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு கலையரசனின் குழுவினராக பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் செய்யும் சேட்டைகளும் இந்நிகழ்ச்சியில் உண்டு.

நாளை ஆகஸ்ட் 29 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்சசியில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

ராஜா ஜல்சாவிற்கும், சிறப்பு விருந்தினரான நடிகை நமீதாவிற்கும் இடையில் நடைபெறும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரையாடல்களும் மற்றும் ஜல்சாவின் டிவியில் குதூகலமூட்டும் ஒரு ஸ்பூஃப் உடன் இணைந்து ரசிக்க வைக்க உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி நடிகை நமீதா பேசுகையில், 

“இந்நிகழ்ச்சி, ஒரு புதுமையான கருத்தாக்கத்துடன் குடும்பமே பார்த்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு ஷோவாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கின்ற விசித்திரமான ஒரு நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 – க்காக, சின்னத்திரையில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அற்புத அனுபவமாகும்.  இக் குழுவினரது உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் பிரமிக்க வைக்கின்றன.  

காமெடி தளத்தின் நடிகர்களோடு சேர்ந்து பணிபுரிய நான் நீண்டகாலமாக விருப்பமும், நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு சிறந்த நிகழ்ச்சியுடன் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற சிறப்பான சேனலுடன் இணைந்து பணியாற்றியிருப்பதை விட வேறு என்ன சிறப்பானதை நான் பெற்றுவிட முடியும்,” என்கிறார்.