கலர்ஸ் தமிழ் - ‘எங்க வீட்டு மீனாட்சி’....புதிய தொடர் ஆரம்பம்...

கலர்ஸ் தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் ‘எங்க வீட்டு மீனாட்சி’.

இத்தொடரில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த புதிய தொடர் குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், 

“முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. 

‘எங்க வீட்டு மீனாட்சி’ தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், எனது நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பதோடு, எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார்.

இத்தொடரின் புரோமமோவை கடந்த வாரம் வெளியிட்டுள்ளார்கள்.