கலர்ஸ் தமிழ் - நாளை முதல் புதிய தொடர் ‘அபி டெய்லர்’

கலர்ஸ் தமிழ் டிவியில் நாளை ஜுலை 19 முதல் ‘அபி டெய்லர்’ என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு சிறு நகரத்தில் தையற் கலைஞராக (டெய்லர்) வாழ்க்கையை நடத்தும் துடிப்பான, இளம் பெண் அபிராமியின் (ரேஷ்மா முரளிதரன்) கதையைச் சொல்கிறது ‘அபி டெய்லர்’.  

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை சுந்தரமூர்த்தி (படவா கோபி) மற்றும் கூடப் பிறந்த தங்கை ஆனந்தி (ஜெயஸ்ரீ) ஆகியோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை சுமப்பவர் அபி. அவரது சிறிய கடையை சிறப்பாக நடத்தி முன்னேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர். 

ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான அசோக் (மதன் பாண்டியன்ல்), ஒரு தொழிலகத்தை அந்த சிறு நகரில் ஆரம்பிக்கிறார். செயல்படத் தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே அபியுடன் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடுகிறார் அசோக்.  அபி மற்றும் அசோக் இருவருக்கும் இடையே நிகழும் மோதலும், காதலும் தான் இத்தொடரின் கதை.  

abhi tailor colors tamil

இந்த புதிய தொடர் பற்றி கலர்ஸ் தமிழ் வர்த்தகத் தலைவர் அனூப் சந்திரசேகரன் கூறுகையில், 

“பெண்கள் சித்தரிக்கப்படும் வழிமுறையின் போக்குகளையே மாற்றுவதற்கு எமது அலைவரிசையின் நெடுந்தொடர்கள் வழிவகுத்திருக்கின்றன.  மனதைத் தொடுகின்ற நிகழ்வுகளோடு நிஜமான, யதார்த்தமான, அழுத்தம் திருத்தமான கதைகளை இவற்றின் மூலம் நாங்கள் உயிர்ப்புள்ளதாக எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம்.  

எங்களது வாக்குறுதியைப் பின்பற்றும் வகையில், தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய அளவுகோல்களை நிறுவுகின்ற மற்றுமொரு அற்புதமான நெடுந்தொடரை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.  அனைத்து வீடுகளிலும் பேசப்படும் பெயராக அபி உருவெடுப்பாள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.  உலகமெங்கும் தமிழ் பேசும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை,” என்கிறார். 

இத்தொடரின் இயக்குனர் பஷீர் பேசுகையில், 

“அபி டெய்லர்’ என்பது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும்.  முன்னணி டிவியான கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு இதை ரசிகர்களுக்குப் படைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த டிவி, தொடங்கப்பட்டதிலிருந்தே புத்துணர்வூட்டுகின்ற யதார்த்தமான கண்ணோட்டத்தை வழங்கியதன் மூலம் பெண்களை மையமாகக் கொண்ட கதைகளின் சித்தரிப்பையே மாற்றியிருக்கிறது.  

தைரியத்துடனும், திடமனதுடனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளியை துணிவுடன் எதிர்கொள்கின்ற அபி என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் பார்வையாளர்களும் இணைவது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.  அபியும் மற்றும் அவளது கதையும் பல இளம் பெண் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.  இந்த கதாபாத்திரத்தோடு ஒரு சகோதரிபோல் இணைகின்ற உணர்வு அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் நான் கருதுகிறேன்,” என்கிறார்.

நாளை ஜுலை 19 ஆரம்பமாகு இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.