கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் - சினிமா நட்சத்திரங்கள் Vs கலர்ஸ் நட்சத்திரங்கள்

கலர்ஸ் தமிழ் டிவியில் ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’.

நாளை மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறதாம். 

தமிழ்த் திரையுலகில் கதாநாயகிகளாக வளர்ந்து வரும் உபாசனா ஆர்சி, ரிஷா ஜேகப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா மற்றும் சாய் பிரியங்கா ரூத் ஆகியோரும், கலர்ஸ் தமிழ் டிவியின் நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா ஆகியோருடன் இந்த வார நிகழ்ச்சியில் போட்டி போட உள்ளார்கள்.

அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த வார நிகழ்ச்சியில், வழக்கம் போல் பல்வேறு சுவாரசியமான விளையாட்டுக்கள் இடம் பெறுகிறது.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் அறிவையும் மற்றும் சமயோசித திறனையும் பரிசோதிப்பதாக இந்த விளையாட்டுகள் இருக்கும். 

எக்ஸ்பிரஷன்ஸ் சுற்றிலிருந்து மேக்-அப் சுற்று என குதூகலமான போட்டிகள் நிறைந்த இந்நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்களின் இதுவரை அறியப்படாத முகங்களை, நகைச்சுவை கலந்து இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.